என்னய எப்படியாவது நாட்டுக்கு கூட்டிட்டு போங்கம்மா..!

-மு.அ.அப்துல் முஸவ்விர்

என்னய எப்படியாவது நாட்டுக்கு கூட்டிட்டு போங்கம்மா..!
என்னய எப்படியாவது நாட்டுக்கு கூட்டிட்டு போங்கம்மா..!

ன்பின் சகோதர-சகோதரிகளே..!
பலாத்காரத்தால் பலியான இந்திய சகோதரியின் மறைவால் கோபக்கார இந்தியா கொதித்த சூடு அடங்குவதற்குள்,மரணதண்டனை விதிக்கப்பட்ட இலங்கை சகோதரி ரிஸானாவின் மறைவால் இலங்கையில் விவாத சர்ச்சைகள் சூடுபிடித்து நிற்கின்றன.
ரிஸானா விவகாரம் எந்த வகையில் அணுகப்பட வேண்டும் என்பது குறித்து பல்வேறு அம்சங்கள் முகநூலிலும் இன்னபிற ஊடகங்களிலும் விவரம் அறிந்தோர் மத்தியிலும் குறிப்பாக ரிஸானா சார்ந்த இலங்கை நாட்டிலும் பல கோணங்களில் அலசப்படுகின்றன.
இந்த விவகாரத்தை எப்படி அணுகுவது..? யார் குற்றவாளி..?
முதலில், இரு உயிர்கள் (ரிஸானா மற்றும் இறந்த ஸவூதி குழந்தை) பற்றிய இந்த பிரச்னையில் பல்வேறு அம்சங்கள் இருப்பினும் நான்கு அதிமுக்கிய கோணங்களில் இதைக் காணலாம்.ஒன்று: ரிஸானா குற்றவாளி,தண்டனை கிடைக்க வேண்டும்.இரண்டு:ரிஸானா நிரபராதி,சட்டம் குற்றவாளி,மூன்று:ரிஸானா குற்றவாளி,பாதிக்கப்பட்ட குடும்பம் மன்னிக்கக் கூடாது.நான்கு:ரிஸானா குற்றவாளி அல்லது நிரபராதி, பாதிக்கப்பட்ட குடும்பம் மன்னித்திருக்கலாம்.
இதில் முதல் நிலைப்பாடு பாதிக்கப்பட்ட ஸவூதி குடும்பத்தினுடையது.இரண்டு, இஸ்லாத்தின் குற்றவியல் சட்டங்கள் மீது காழ்ப்புணர்வு கொண்டிருக்கும் நவீனத்துவ முஸ்லிம் மற்றும் முஸ்லிமல்லாத சில மக்களின் நிலைப்பாடு. மூன்றாவதை யாருமே சொல்லக்கூடியவர்கள் அல்லர், பாதிக்கப்பட்ட அந்த குடுமபத்தின(ர்களில் ஒரு சில)ர் தவிர! நான்காவதாவது நடந்திருக்காலாமே என்பது ஒட்டுமொத்த மக்களின் நினைப்பாக இருந்தது, பாதிக்கப்பட்ட அந்த குடுமபத்தின(ர்களில் ஒரு சில)ர் தவிர!
இனி விஷயத்துக்கு வருவோம்!இஸ்லாமிய குற்றவியல் சட்டப்படி தண்டணை தரப்பட்டிருப்பின் அதில் இரு கருத்துக்களுக்கு இடமில்லை. உண்மையில் ரிஸானா குற்றவாளியா இல்லையா என்பதை ஆராய இந்த தலையங்கம் வரையப்படவில்லை.அதெல்லாம் நீதிமன்ற வழக்காடு முறைமைகளில் அலசப்பட வேண்டிய விஷயங்கள்! குற்றங்கள் அவைகளின் நடைமுறை சார்ந்த தளங்களில்தான் அணுகப்பட வேண்டுமே அன்றி பால்,நாடு சார்ந்த அம்சங்களில் அல்ல..!
எனவே,இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்களை காட்டுமிராண்டித்தனமானதாகவும்,அதனைப் பின்பற்றுவதில் குறைந்தபட்சமாவது திகழும் ஸவூதி அரேபியா மற்றும் மன்னர் குடும்பத்தையும் குற்றவாளிகளாக விமர்சிப்பது எந்த அடிப்படையில் என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
சட்டம் செய்த கடமையை உணர்ந்திருப்பதால்தான், பொருளாதாரத்தால் ஏழ்மையில் இருக்கும் ரிஸானாவின் தாயார் ‘என் பிள்ளையை அல்லாஹ்தான் கொடுத்தான்.அல்லாஹ்வே எடுத்துக்கிட்டான்.இஸலமிய ஷரீஅத் சட்டத்ததை நான் மதிக்கின்றேன்’ என்று கூறி இறைநம்பிக்கையால் இணையில்லா செல்வந்தராக உயர்ந்துவிட்டார்.
ரிஸானா தவறிழைத்தாரா இல்லையா என்பது இருவருக்கு மட்டுமேதான் தெரியும்.ஒன்று சுயம் ரிஸானா.இரண்டாவது இதயங்களின் இரகசியங்களை அறிந்த அந்த ஏக இறைவன்!ரிஸானா போன்றோரின் மனஇரகசியத்தை குறைந்தபட்சம் உலகநீதிமன்ற நீதிபதிகள் அறிய முடியுமானால் பிரச்னையே இல்லையே.!ஆனால்,ஏகஇறைவனைத் தவிர மன இரகசியத்தை யார்தான் அறிய முடியும்..?
குற்றவாளியா., இல்லையா என்று ஆராய்வீர்களானால்.., குற்றவாளிப் பட்டியல்கள் நீண்டுகொண்டே போகும்..!
இன்று ரிஸானாவின் ஏழ்மையை அவளுடைய இயலாமையுடன் முடிச்சு போட்டு அதனை அவிழ்க்க முடியாமல், இஸ்லாமிய சட்டங்களை கடப்பாரை போன்ற வன்மம் மிக்கதாகக் கூறுவோர், அதே ரிஸானா படிப்பில் கெட்டியாக இருந்தும், 9-ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி குடும்பத்துக்காக விமானம் ஏறினாளே.., அப்போது எண்ணிப் பார்க்காதிருந்த அந்த ‘அக்கறைவான்கள்’ கொண்ட சமூகத்தினர் குற்றவாளிகளா..?
போலி சான்றிதழ் தந்து அவளின் ஏழ்மையை இன்று தூக்குக் கயிற்றுக்கு விலை பேசிவிட்ட முகவர்கள் குற்றவாளிகளா?
தனது ஊரில் வசிக்கும் ஒரு ஏழை முஸ்லிம் பருவப்பெண்ணை இந்த நிலைக்கு ஆளாக்கிவிடும் வகையில் அவளைக் கவனிக்காதுவிட்ட சமூகம் குற்றவாளியா?
தனது குடும்பத்துக்காகவோ அல்லது சுய சம்பாத்தியத்துக்காகவோ இந்த நிலைக்கு ஆளாகிவிட்ட சுயம் அந்த ரிஸானாவே குற்றவாளியா? யார் குற்றவாளி??
தீர்ப்பு இறைமன்றத்தில் தீர்வாகும் வரை இன்று நாம் ஸவூதி சட்டங்களையோ அல்லது மன்னிக்காத அந்த குடும்பம் பற்றியோ அல்லது சுயம் ரிஸானாவையோ குற்றஞ்சாட்டி பயனில்லை.
ரிஸானாவின் விஷயத்துக்கு வருவோம்!
சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டு உண்மையில் ரிஸானா குற்றவாளி இல்லை என இருந்தால், அவளுக்குரிய சுவனப்பரிசை இறைவன்தான் நிர்ணயிக்க முடியும்.அது மறுமையில்தான் தீர்ப்பாகும்.
குறிப்பாக ஸவூதி மற்றும் இஸலாமிய சட்டங்களைக் குறை கூறுவோர் சற்று சிந்திக்கட்டும்..!ரிஸானாவைப் பலியிட வேண்டும் என்பது மட்டும் அவர்களின் நோக்கமாக இருப்பின், அவளைக் காப்பாற்ற சம்பந்தப்பட்ட குடும்பத்தாரிடம் மன்னிப்புக்காக தனிப்பட்ட முறையில் கோரிக்கை வைத்திருப்பார்களா..? 3 மில்லியன் ரியால்களும்,உடல்நலன் பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தின் இன்னொரு குழந்தைக்கு வெளிநாட்டு சிகிச்சை செலவை ஏற்றுக்கொள்ள உதவுவதாக தனிப்பட்ட ரீதியில் தனவான்கள் சொல்லியிருப்பார்களா..?
ஸவூதி மன்னர் ஒரு கோரிக்கையாக ஈட்டுத்தொகை பெற்று,மன்னிக்குமாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தை கேட்டுக்கொண்டதும் இது திருட்டுக் குற்றம் அல்ல என்பதால்தான்..!தீர்ப்பை மாற்ற அவருக்கும் உரிமை இல்லை.ஏனென்றால், பாதிக்ப்பட்ட குடும்பம்தான் இறைவன் தந்த சட்டத்துக்குட்பட்டு மன்னிக்க தகுதியானவர்களே அன்றி ஆட்சியாளர்கள் அல்லர்.
மேலும்,தன்னிடம் திருட்டு விஷயத்தில் பரிந்துரைக்கு வந்த உயர்குலத்தாரிடம் அதுவும் தனது குறைஷ் குல மக்களிடம் ‘எனது மகள் ஃபாத்திமாவேகூட திருடியிருந்தால் அவள் கையை வெட்டுவேன்’ என்ற தானைத் தலைவனின் ஆளுமையில் பயின்ற மக்கள் நாம்.
அதேபோல் பல்வேறு உயிர் தொடர்பற்ற அம்சங்களிலேகூட சாட்சிகளின் பலம், ஆதாரங்களின் வலு இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு இஸ்லாமிய சட்டம் மிக நுட்பமாக நடைமுறைப்படத்தப்படும்போது, ரிஸானாவின் வழக்கு போன்ற உயிர் தொடர்பான விஷயங்கள் எனில், எத்துணை ஆழமாக நுட்பமாக வழக்கை நடத்தியிருப்பார்கள் என்பதை நாம் உணர வேண்டாமா..?
ஸவூதியை முன்வைத்து இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்களைக் குறை கூறுவோர், மற்றொன்றையும் இங்குக் கவனிக்க வேண்டும், இஸ்லாமிய அனுமதி வரையறைகளுக்குட்பட்டு தன்னால் இயன்ற வரை ஸவூதி அரேபியா ரிஸானாவைக் காப்பாற்ற முயன்றது.இதனை எவரும் மறுக்க முடியாது.அதனால்தான் 2007-இல் முடிவான பின்னரும் இத்தனை நாட்கள் வரை மன்னிப்பின் வாய்ப்புக்கு அவகாசம் ஏற்படுத்தித் தந்திருந்தது.
ஆனால், அனைத்துக்கும் மேலாக, இறைசட்டங்களின் அடிப்படையில் முடிவான ஒரு தீர்ப்பை மன்னிப்பால் மாற்ற பாதிக்கப்பட்ட குடும்பத்துக்குத்தான் உரிமை உண்டே தவிர நாட்டு மன்னர்கூட ஒன்றும் செய்ய முடியாது என்பதையும் ஸவூதி நிரூபித்திருக்கின்றது.நமது நாடுகளில் நடப்பதுபோல், கருணை மனுவை ஜனாதிபதிகளுக்கு அனுப்பி இறைசட்டத்தை கேலிக்கூத்தாக்கும் அம்சம் இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தில் கடைப்பிடிக்க முடியாது..!
இந்த விஷயத்தில் ஒரே ஒரு சாரார் அதாவது, பழிக்குப் பழி எனும் உரிமையை இஸ்லாம் கொடுத்திருப்பதைப் பயன்படுத்திக் கொண்ட பாதிக்கப்பட்ட ஸவூதி உதைபி குடும்பத்தார்,அதனைவிட சிறந்த மன்னிப்பின் மகிமையைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால்,உலகத்தார் முன்னிலையிலும், மறுமையில் இறைசந்நிதானத்திலும் ஒரு உன்னத மதிப்பை எய்தியிருப்பர்.அந்த மகத்துவமிக்க வாய்ப்பை அவர்கள் இழந்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்..!
ஆம்..!கருப்பு பர்தாவில் விழிகள் மட்டும் தெரிய தூக்குமேடைக்கு நடைபயின்ற கடைசி வரை ‘என்னய எப்டியாவது நாட்டுக்குக் கூட்டிட்டுப் போங்கம்மா’ என்று ஏங்கி;க் கொண்டிருந்த அந்த பருவப் பெண் குற்றவாளி இல்லை என்றால்,இறைநீதிமன்றத்தில் தனக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்காக பரிகாரமாய் இறைகொடையை வெல்வாள்.அதுவரை யார் குற்றவாளிகள் என் பரஸ்பர குற்றச்சாட்டுக்களில் வீழ்ந்திடாமல்,இனி இதுபோன்ற ரிஸானாக்களின் நிலைக்கு எந்தவொரு மனிதரும் காரணமாகி நிற்கக்கூடாது எனும் வகையில் தனிமனிதர் ஒவ்வொருவரும் பொதுநல நோக்கோடு சமூக தொலைநோக்கோடு செயற்படவேண்டும்.நம்மால் இப்போது செய்ய முடிவது எல்லாம்.., அவள் குற்றவாளி இல்லையெனில் அவளுககு இழைக்கப்பட்ட அநீதிக்காக இறைவா, மறுமையில் அவளு;க்கு உன்ன நீதியை வழங்குவாயாக..! என்றுதான் பிராரத்திக் முடியும்.உலகியல் ரீதியாக அவளது வருமானத்தை நம்பி வாழ்ந்துகொண்டிருக்கும் அவள் குடும்பத்தாருக்கு இயன்ற உதவிகளை ஆற்றிட வேண்டும்.அதற்கும் மேலாக, அந்தந்த நாட்டு சட்ட ரீதியாக,பருவப் பெண்கள் பிழைப்புக்கு வழி தேடிச் செல்லும் வகையில் சட்டங்கள் முறைப்படுத்தப்படுவதில் கடும் நடவடிக்கைகள் பேணப்பட வேண்டும்.
இதயங்களின் இரகசியங்கள் அறிந்த நாயனே..! அந்த இளம்பெண்ணின் பிழைகளைப் பொறுத்து சுவனததில் நுழைவிப்பாயாக..!!அவளை இழந்து வாடும் இந்த ஏழை அபலைக் குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையை வழங்குவாயாக..!!!

கழுத்தைப் பிடிக்கும் கடன் அட்டைகள்..!

-அகார் முஹம்மத்

கழுத்தைப் பிடிக்கும் கடன் அட்டைகள்
கழுத்தைப் பிடிக்கும் கடன் அட்டைகள்

பெரும்பான்மை மனித வாழ்வின் தவிர்க்க முடியாதது கடன் அம்சம்..! கடனுக்காக வாழ்வை அடகு வைப்பது மனிதனின் துரதிருஷ்டம்..!!சாக்கு போக்கு சொல்லி நவீன பொருளாதாரக் கவர்ச்சிகளில் விழுவது எந்நிலையிலும் ஒப்புக்கொள்ள இயலா ஓரங்க நாடகம்..!அந்தோ கடன் அட்டை இன்று அட்டைப் பூச்சி போல் நாகரிக மனிதர்களுடன் இணைந்திருப்பது தவிர்த்தே ஆகவேண்டிய கட்டாயம்..!!

வட்டியை அடிப்படையாகக் கொண்ட இன்றைய உலகப் பொருளாதாரம் எந்தளவு தூரம் உலக மக்களின் பொருளாதார வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது என்பதை ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. வட்டி பூச்சிய நிலைக்குச் செல்லாதவரை உலகப் பொருளாதாரம் சீர்பெற முடியாது என்பது பொருளியல் ஆய்வாளர்கள் பலரின் கருத்தாகும். அதாவது வட்டி அமைப்பு முற்றாக ஒழிக்கப்படுவதன் ஊடாகவே உலகில் ஆரோக்கியமான ஒரு பொருளாதார ஒழுங்கு உருவாக முடியும் என்பதே உண்மையாகும். ஒரு பொருளியல் அறிஞர் வட்டியை ‘வாழ்வின் எய்டஸ் என வர்ணித்துள்ளார். வட்டியானது பொருளாதாரம் எனும் உடலின் பலத்தைக் குன்றச் செய்து அழித்துவிடும் எய்ட்ஸாகவே இருக்கிறது. இதனையே திருக் குர்ஆன், ‘அல்லாஹ் வட்டியை அழிக்கிறான்’ எனக் கூறுகிறது.
வட்டி என்பது ஒரு வகையில் நவீன காலனித்துவமாகும். கடனின் கோரப் பிடியில் எவ்வாறு மூன்றாம் உலக நாடுகள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் அறிவோம். மூன்றாம் உலக நாடுகள் பலவற்றில் நாளை பிறக்க இருக்கும் குழந்தையும் கூட பெருந்தொகைக் கடனுடன்தான் பிறக்கிறது.
வட்டியின் பயங்கர விளைவுகளை கவனத்திற் கொண்டு அதனை ஹராமாக்கியுள்ள இஸ்லாம் அதற்குப் பிரதியீடாக பல்வேறு வர்த்தக, வாணிப ஒழுங்குகளையும் அமைப்புக்களையும் தந்துள்ளது. வட்டிக்கு மற்றுமொரு பதிலீடாக ஸதகா அமைப்பை இஸ்லாம் அறிமுகப்படுத்தியுள்ளது. இஸ்லாம் கூறும் ஸதகா சார்ந்த ஓர் அம்சம்தான் ‘கர்ளுல் ஹஸன் எனும் வட்டியில்லா அழகிய கடனாகும். வர்த்தக, வாணிப, வியாபார நோக்கங்களுக்காக வட்டியை நாடவேண்டியுள்ளவர்களுக்கு இஸ்லாம் பல்வேறு பொருளீட்டல் முயற்சிகளை பிரதியீடாக வழங்கியிருக்கின்றது. தனது உணவுக்காக, அன்றாட அடிப்படை தேவைகளுக்காக வட்டியை நாட வேண்டி உள்ளவர்களுக்கு அது ஸதகாவையும், வட்டியில்லா அழகிய கடன் அமைப்பையும் பதிலீடாக வழங்கியிருக்கிறது.
கடன் வழங்குவது ஒருவகை உதவியும், ஒத்துழைப்புமே அன்றி உழைப்புக்கான வழியல்ல என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். எனவே, கடன் கொடுத்தவர் தான் கொடுத்த அளவையே கடன் வாங்கியவரிடமிருந்து திருப்பிப் பெற வேண்டும். கொடுத்த தொகையை விட கூடியதாக திருப்பித் தர வேண்டும் என எதிர்பார்ப்பதும் ஹராமாகும். இதனையே இஸ்லாம் வட்டி என்கிறது.
கடன் கொடுப்பது இஸ்லாத்தில் ஒரு பெரும் சமூகநலப் பணியாகக் கொள்ளப்படுகிறது. ஒருவர் கடன் வழங்கி செய்கின்ற உதவி அடுத்த சகோதரனின் கஷ்டங்களில் பங்கேற்கும் புண்ணிய காரியமாக இஸ்லாம் கருதுகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவர்கள் குறிப்பிடுகிறார்கள்:’எவர் ஒரு முஸ்லிமுடைய உலகக் கஷ்டங்களில் ஒன்றை நீக்க உதவுகின்றாரோ அவரின் மறுமைநாள் கஷ்டங்களில் ஒன்றை அல்லாஹ் நீக்கிவிடுவான். மேலும் எவர் கஷ்டத்தில் இருக்கும் ஒருவருக்கு (உதவி செய்து) அவருக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கின்றாரோ அல்லாஹ் உலகிலும், மறுமையிலும் அவருடைய (கஷடங்களை) இலேசாக்கிக் கொடுப்பான்.(அறிவிப்பாளர்:அபூ{ஹரைரா (ரலி),ஆதாரம்:முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:’ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு இரு தடவைகள் கடன் வழங்கினால் அதில் ஒரு தடவை அவர் ஸதகா- தர்மம் செய்தவரைப் போன்றவராவார்.’ (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி),ஆதாரம்:இப்னு மாஜா, இப்னு ஹிப்பான்)
திருக் குர்ஆன் பின்வருமாறு தூண்டுகின்றது: நீங்கள் அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுத்தால் அதனை அவன் உங்களுக்குப் பன்மடங்கு அதிகமாக்கித் தருவான். மேலும் உங்கள் பாவங்களைப் புறக்கணித்து விடுவான். அல்லாஹ் உரிய மதிப்பளிப்பவனாகவும், சகிப்புத்தன்மை கொண்டவனாகவும் இருக்கின்றான்;.64:17
கடன் தொடர்பான ஷரீஅத் வரையறைகள்:
கடன் தொடர்பான சில இஸ்லாமிய வரையறைகளும் சட்டதிட்டங்களும் இருக்கின்றன.
பொதுவாக கடனாகக் கொடுத்த தொகையை விட கூடுதலாகப் பெறப்படும் தொகை தடைசெய்யப்பட்ட வட்டியாக கொள்ளப்படுகின்றது. வட்டிக்கான வரைவிலக்கணங்களும் அவ்வாறுதான் அமைந்துள்ளன. ஏதாவது ஒரு பயன்பாட்டைப் பெற்றுத்தரும் எந்தவொரு கடனும் வட்டியாகும் என்றே இஸ்லாமிய அறிஞர்கள் வரைவிலக்கணப்படுத்துகின்றார்கள். கொடுத்த தொகையை விட கூடுதலாகத் திருப்பித் தரவேண்டும் என நிபந்தனை இடுவதே ஹராமாகும்.
இனி கடன் என்பது பொருளாதார நோக்கில் பெற்றுள்ள வடிவங்களைப் பார்ப்போம்.
வட்டிக்குக் கடன் வழங்கும் முறை இன்று பல வடிவங்களைப் பெற்றுள்ளது. ஆழசவபயபநஇகுiயெnஉநஇடுநயளiபெ போன்றன அவற்றில் சில வடிவங்களாகும். அவற்றுள் ஒரு வடிவமே ஊசநனவை ஊயசன என வழங்கப்படுகின்ற கடன் அட்டை ஒழுங்காகும். ஆரம்பத்தில் மேற்குலகில் அறிமுகமான கடன் அட்டை இப்போது உலகமயப்படுத்தப்பட்டு உலகின் மூலை முடுக்குகளிலும்,சந்து பொந்துகளிலும் பரவலாக பயன்படுத்தப்படும் ஒன்றாக மாறியிருக்கின்றது. தேவையுடையோரும் தேவையற்றோரும் இதனை உபயோகிக்கும் நிலை இன்று உருவாகியுள்ளது.
நிதி நிறுவனங்களும் வங்கிகளும் வீட்டுக் கதவுகளைத் தட்டி கவர்ச்சியான விளம்பரங்களையும் சந்தைப்படுத்தும் உத்திகளையும் கையாண்டு இதற்கான வாடிக்கையாளர்களை பெற்று வருகின்றன. பலர் இதனால் ஏற்படும் மோசமான விளைவுகளை உணராத நிலையில் இதற்குப் பலியாகி வருகின்றனர். கடன் அட்டையை வைத்திருப்பதை ஒரு பெருமையாகவும் நாகரிகமாகவும் கருதும் நிலையும் தோன்றியுள்ளது.
உண்மையில் கடன் அட்டை என்பது நுகர்வோரை வீணாகக் கடன்காரராக மாற்றும் ஒரு நவீன கால சமூக கொடுமையாகும். கையில் பணம் இல்லாத நிலையிலும் உளரீதியாக ஒருவரை செலவு செய்யத் தூண்டும் ஒரு உத்தியாகவே இது காணப்படுகின்றது. பணஅட்டையை வைத்திருக்காதவர் கையில் உள்ள காசை கொண்டு அவசியமான பொருட்களை மட்டுமே கொள்வனவு செய்வார். பணஅட்டையை வைத்திருப்போரோ அத்தியவசியமற்ற பொருட்களையும் வாங்குவதற்கு தூண்டப்படுவார். அவ்வாறே கையிலுள்ள பணத்தை வைத்து பொருள் வாங்குபவர் ஏலவே திட்டமிட்ட பொருட்களையே கொள்வனவு செய்வார். கடன் அட்டை வைத்திருப்போரோ பலபோது அட்டையிலுள்ள பணத்தை தனது பணமாக நினைத்து செலவு செய்ய முற்படுவார். இத்தகைய உளநிலையை அது உருவாக்குகின்றது என்பது இன்று நிறுவப்பட்ட ஒரு உண்மையாகும். இதனால் தனது நுகர்வுச் சக்திக்கு மேல் செலவு செய்து கடன் பளுவினால் வாடும் பல மில்லியன் பேரை இன்று உலகில் காணமுடிகின்றது. கடன் அட்டைக்கு பலியான பலர் அதன் மோசமான விளைவுகளை உணர்ந்துள்ள போதிலும் அதிலிருந்து விடுபட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.இந்த வகையில் இது ஒருவகை அடிமைத் தளையாகும். அமெரிக்காவில் ஒருவர் தன்னிடம் இருந்த கடன் அட்டையின் தொல்லையிலிருந்து விடுபடும் நோக்குடன் அதனை தூக்கி எறிந்து விட்டு, இன்று நான் இந்த அடிமைத் தளையிலிருந்து விடுதலைப் பெற்றுவிட்டேன் என்றார்.
கடன் பெறுவது ஓர் ஆரோக்கியமான விஷயமல்ல. ஒருவர் கடன்பெறும் நிலைக்குத் தள்ளப்படுவது ஒரு பெரும் அவலமாகும். இதனாலேயே நபி (ஸல்) அவர்கள் கூட கடன் சுமையில் இருந்து பாதுகாப்புத் தேடினார்கள். ஆனால் இன்று ஊசநனவை ஊயசன உலகில் பல மில்லியன் கணக்கானோர் பெரும் கடன்காரர்களாக மாறியுள்ளனர்.
பெரும்தொகை பணத்தை கையில் வைத்திருப்பது ஆபத்தானது. அந்த வகையில் கடன் அட்டையை வைத்திருப்பது பாதுகாப்பானது என்பது அதனை பயன்படுத்தோரின் ஒரு முக்கியமான வாதமாகும். இது ஒரு நியாயமான வாதம் என்பதனை மறுப்பதற்கில்லை. ஆனால் குறித்த பிரச்சினைக்கான ஒரே பரிகாரம் கடன் அட்டை மட்டுமே என்பது பிழையான வாதமாகும். ஏன் காசோலைகளை பயன்படுத்த முடியாது.
அவ்வாறே னுநடிவை ஊயசன என்று அழைக்கப்படுகின்ற அட்டைகளும் ஊசநனவை ஊயசன-களுக்குப் சிறந்த ஒரு மாற்றீடாகும். னுநடிவை ஊயசன என்பது ஒருவரது வங்கிக் கணக்கில் உள்ள வைப்பின் அளவுக்குப் பயன்படுத்தக் கூடிய ஓர் அட்டையாகும். ஒப்பீட்டு ரீதியில் பொருளாதார நோக்கிலும் சரி இஸ்லாமிய கண்ணோட்டத்திலும் சரி இது ஒரு பாதுகாப்பான ஒழுங்காகும். இன்று உலகில் உள்ள நுகர்வோர் நலன் காக்கும் அமைப்புக்கள் கடன் அட்டைக்குப் பதிலாக கையிலுள்ள பணம் (ஊயளா), காசோலை (ஊhநஙரந), பெறுகடன் அட்டை (னுநடிவை) முதலானவற்றைப் பயன்படுத்துமாறு நுகர்வோருக்கு ஆலோசனை கூறுகின்றன. இன்றும் அமெரிக்காவில் வளர்ந்தோரில் சுமார் 29மூ பேர் கடன் அட்டையை பயன்படுத்துவதில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
கிரடிட் கார்ட் பற்றிய ஷரீத் பார்வை
பொதுவாக வட்டியுடன் தொடர்புடைய எத்தகையதொரு கொடுக்கல் வாங்கலாக இருப்பினும் அது இஸ்லாமிய நோக்கில் ஹராமானது என்பதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை என்பதை அனைவரும் அறிவர். ஆயினும் தற்கால வங்கிகள் வழங்கும் கடன் அட்டைகளைப் பயன்படுத்துவது தொடர்பாக சமகால அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. கடனட்டையைப் பெறும் ஒருவர் அதில் குறிக்கப்பட்டுள்ள தவணைக்கு முன்பாக தாம் பெற்ற கணக்கை செலுத்தி விட்டால் தாமதக் கட்டணத்தினால் விளையும் வட்டியின் பாதிப்பில் இருந்து விடுபட முடியும் என்பதை வைத்தே கருத்து வேறுபாடு தோன்றியுள்ளது.
இந்த வகையில் குறிக்கப்பட்டுள்ள தவணைக்கு முன்பாக கணக்கைச் செலுத்தி கால தாமதம் காரணமாக கொடுக்க வேண்டியிருக்கும் வட்டித் தொகையை தவிர்க்கும் நிலையில் ஒருவர் கடன் அட்டையைப் பயன்படுத்த முடியும் என சில அறிஞர்கள் கருதுகின்றனர். கடன் அட்டையைப் பெற்றவர் காலதாமதமின்றி கணக்கை செலுத்தி வட்டி கொடுக்கும் நிலையைத் தவிர்த்த போதிலும் காலதாமதம் ஏற்பட்டால் குறித்த வட்டித் தொகையை செலுத்துவதற்கான உடன்படிக்கையில் கையொப்பமிடுகின்றார் எனும் வகையில் இது ஹராமானதாகக் கொள்ளப்படுதல் வேண்டும் என்ற கருத்தை மற்றும் சில அறிஞர்கள் முன்வைக்கின்றனர்.

ஷரீஅத் நோக்கில் மட்டுமன்றி ஏற்கனவே விளக்கியது போல பொருளாதார நோக்கிலும் கடன் அட்டைப் பயன்பாடு பிரச்னைக்குரிய ஒன்றாகவே விளங்குகின்றது. கடன் அட்டையைப் பயன்படுத்தும் ஒரு முஸ்லிம் ஆரம்பத்தில் வட்டி கொடுப்பதில் இருந்து விடுபடும் வகையில் உரிய தவணைக்கு முன்னர் கணக்கைச் செலுத்தினாலும் காலப் போக்கில் கவனக்குறைவினால் உரிய காலத்தில் பணத்தை செலுத்த முடியாமல் போய் வட்டி செலுத்தும் நிலைக்குத் தள்ளப்படும் ஆபத்து உண்டு என்பதை எவரும் மறுக்க முடியாது. மேலும் கடன் அட்டை அடிப்படையில் வட்டியை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஓர் ஒழுங்காகும்.

ஒரு சிலர் உரிய தவணையில் கடனைத் திருப்பிச் செலுத்தி வட்டியில் இருந்து விடுபட்டாலும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் காலதாமதத்தின் காரணமாக ஒரு சிறு தொகை வட்டியையேனும் செலுத்துபவர்களாகவே இருப்பர். எனவே ஒரு முஸ்லிம் நேரடியாக இல்லாத போதிலும் மறைமுகமாக வட்டியை அடிப்படையாகக் கொண்ட ஒரு கொடுக்கல்-வாங்கல் ஒழுங்கு வளர்வதற்கு துணை புரிகின்றார் எனும் வகையில் குற்றவாளியாக கருதப்படும் நிலை காணப்படுகின்றது.
எனவே, ஒரு பேணுதலான முஸ்லிம் கடன் அட்டைப் பாவனையை தவிர்த்துக் கொள்வதே பொருத்தமான நிலைப்பாடாக கொள்ளப்படுகின்றது. இதற்கு மாற்றீடாக காசோலையை (ஊhநஙரந) அல்லது பெறுகடன் அட்டையை (னுநடிவை ஊயசன) பயன்படுத்துவதே பொருத்தமானதாகும். அல்லாஹ்வே யாவற்றையும் நன்கறிந்தவன்.

2012 கடந்து வந்த பாதை…!

ர்வாதிகார முபாரக் ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் டாக்டர’ முஹம்மத் முர்ஸி எகிப்து நாட்டின் அதிபரானார்..!
மலாலாவைத் தலையில் தூக்கி ஆடின ஊடகங்கள்..!முத்தாய்ப்பாக அவளுக்கு அமெரிக்க ‘டைம்’ பத்திரிகை நாயகி விருது கிடைத்தது.
துமிழகத்திலும் நாட்டிலும் தலைவிரித்தாடிய ‘டெங்கு’ காய்ச்சல் பல உயிர்களைக் காவு கொண்டது.
துர்மத்தின் பெயர் கொண்ட தர்மபுரி.., ‘அதர்மபுரி’-யாக மாறியது.கலப்பு மண சாதிப் பிரச்னையால் கொழுந்துவிட்டெரிந்தது நகரம்!
சென்னை தாம்பரம் அருகே, நிர்வாக அலட்சியத்ததால்,பள்ளி வாகனத்திலிருந்த ஓட்டை வழியே விழுந்து ஐந்து வயது சிறுமி பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது.
சென்னை புனித மேரி பள்ளியில் ஒன்பதாவது வகுப்பு படிக்கும் மாணவன் தனது வகுப்பு ஆசிரியை அவர்களை கத்தியால் குத்தி கொலை செய்த கொடும் சம்பவம் பரபரப்பை உண்டாக்கியது.

Continue reading 2012 கடந்து வந்த பாதை…!

நனைந்தாள் ரிஸானா..!

Risஇதனை எழுதும் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள்,  ரிஸானா சம்பவத்தை விமர்சிப்பவர்கள் எப்படியான நோக்கில் தங்களது விமர்சனத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டலையே வழங்கியுள்ளதாகவும், ரிஸானா சம்பவத்தின் பின்னணிகள் எவை? உண்மைகள் என்ன? என்பதை விமர்சனங்கள் செய்யும் ஊடகங்கள் வாயிலாகவன்றி நேரடியாக ஆராய்ந்து அறிந்திருக்கவில்லை எனவும் கூறுகின்றார்! (ஆ-ர்)
‘ரிஸானா நஃபீக்’ உலகம் முழுவதும் உச்சரிக்கப்பட்ட பெயர்.! நீதி சரிந்ததா? நிமிர்ந்ததா? என்று நீதியே இல்லாத உலகம் பேசிய பேசுபொருளின் கரு.! இந்தச் சிறிய வயதில் முழு உலகையும் தன் பக்கம் ஈர்த்த சாதனையின் சொந்தம். ஏன் ரிஸானா இவ்வளவு பிரபல்யமானாள்? இலங்கையின் ஒரு மூலையில் வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்த அந்த சின்னவளை உலகம் ஏன் இவ்வளவு தூரம் தலைநிமிர்ந்து நோக்கியது. அந்த அதிசயம் நிகழ்ந்ததற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது. ஆம் ரிஸானாவின் விடயத்தில் ஷரீஅத் நீதி சம்பந்தப்பட்டிருக்கிறது அவ்வளவுதான்..!

Continue reading நனைந்தாள் ரிஸானா..!

ஹலால் விழிப்பு உணர்வு…!

‘முஸ்லிமல்லாத மேலை நாடுகளில்கூட குறைந்தபட்சம் உடல் மற்றும் சமூக நலன் கருதி ஹலால் – ஆகுமான உணவுமுறையை ஏற்றுக்கொண்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்’ -இஸ்லாமிய நிலையம்-IPCதமிழ்ப் பிரிவு சார்பாக குவைத் மஸ்ஜித் அல்-கபீர் அரங்கில் நடைபெற்ற ஹலால் விழிப்பு உணர்வு கருத்ததரங்கில் கூறினார், ஹலால் பேரவை – HALAL FORUM தலைவர் முஹம்மத் ஜின்னா அவர்கள்..!

உலக அளவில் ஹலால் உணவு குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் முயற்சியின் ஒருமுகமாக குவைத்தில் அண்மையில், ஹலால் விழிப்பு உணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

இஸ்லாமிய நிலையம் – IPC தலைமையக அழைப்புப்பணித் துறை தலைவர் அஷ்ஷெக் பவாஸ் அல்-துவைஜ் அவர்கள் தலைமை வகித்தார்.சகோ. ஷம்ஷூதீன் (எ) ஜேம்ஸ் அவர்களின் திருக் குர்ஆன் ஓதுதலுடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது.IPC ,தமிழ்ப் பிரிவு பொறுப்பாளரும்,வசந்தம் இதழ் ஆசிரியருமான சகோ.மு.அ.அப்துல் முஸவ்விர் அறிமுக துவக்கவுரை ஆற்றினார்.கருத்தரங்கில் சிறப்பு

Continue reading ஹலால் விழிப்பு உணர்வு…!

இறை அற்புதத்தின் இனிய நாதம்…!

Robert Gilham

-இளவேனில்-

றை அற்புதங்களுக்கு ஏது எல்லை..!இறைசட்டங்களைத் தூக்கிப் பிடித்தால் மனிதன் நினைக்கின்றான் அதனைத் தொல்லை..!!மனித நலன்களுக்காகவேயன்றி இறைச்சட்டங்கள் வேறெதற்கும் இல்லை..!!கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் ஒரு யூதர். இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார். இவரது மனமாற்றத்திற்கு வழி செய்தது திருக்குர்ஆனின் ஒரு வசனம்…! ஆந்த வசனம் இதுதான்;-

தலாக்-விவாக விலக்கு சொல்லப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை தாமாகவே பொறுத்திருக்க வேண்டும். தங்களுடைய கருவறைகளில் அல்லாஹ் எதையேனும் படைத்திருப்பானேயானால் அதை மறைப்பது அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல! அல்லாஹ்வின் மீதும், இறுதித் தீர்ப்பு நாளின் மீதும் அவர்கள் நம்பிக்கை கொண்டவராக இருந்தால் ஒருபோதும் அவர்கள் இவ்வாறு செய்யக்கூடாது! அவர்களின் கணவர்கள் (முன்னிருந்த) உறவைச் சரிப்படுத்திக்கொள்ள விரும்பினால், இத்தவணைக்குள் அவர்களை மீண்டும் மனைவியாக்கிக் கொள்ள அவர்களுக்கு முழு உரிமை இருக்கிறது.

Continue reading இறை அற்புதத்தின் இனிய நாதம்…!

உம்மா நான் ஸவூதிக்கு..!

  VASANTHAM - January 2013 Si L_Page_17-அஸ்மின்- (சமீபத்தில் ஸவூதி அரேபியா நாட்டில் மரண தண்டனைக்குள்ளான இலங்கைப் பணிப்பெண் சகோதரி ரிஸானா நஃபீக் மற்றும் அவர் போன்ற பணிப்பெண்களுக்கு இந்த கவிதை சமர்ப்பணம்.இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களில் குறிப்பாக தென்கிழக்கு முஸ்லிம்களின் பேச்சு வழக்கில் இக்கவிதை அமைத்துள்ளோம்)

உம்மாநான் ஸவூதிக்கு போறேன்-எங்கட

கவலைகள் கரச்சல்கள் கலஞ்சோடிப்போக…!

உம்மென்று இருக்காதே நீயும்-என்ட

உசுரப்போல் எப்போதும் புள்ளநான் பாப்பேன்..!!

 

வாப்பாநீங்க ஒழச்சது போதும்-ஒங்கட

பெரச்சின லாத்தையும் நானினி பாப்பேன்…!

சாப்பாட்டுக் கினியென்ன பஞ்சம்…?-ஒங்கள

மௌத்தாகும் வரைக்கும்நான் மனசாற பாப்பேன்..!!

Continue reading உம்மா நான் ஸவூதிக்கு..!

பலாத்காரப் பேயாட்டம்..! பரிதவிப்பில் பாரதம்.,!!

Rape

சுமார் 30 கி.மீ தூரம் வரை பயணப்பட்ட அந்தப் பேருந்தில் ஓட்டுநர் உட்பட ஐவர் மாறி மாறி அந்த வனிதையுடன் வல்லுறவு கொண்டு அரங்கேற்றிய கொடூரத்தின் உச்சமாக,அவரையும் அவருடன் பயணப்பட்ட நண்பரையும் ஓடும் பேருந்திலிருந்து தூக்கி எறிந்தனர்.அவள் மரணத்தை எதிர்கொண்டாள்.,!பின்னர், தில்லியின் கல்லூரி மாணவ -மாணவிகளும், பொதுமக்களும் கைகோர்க்க… போராட்டக்களமாக மாறியது இந்தியா கேட். நாடாளுமன்றத்திலும் விஷயம் எதிரொலிக்க… ‘குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை’ என்கிற குரல் உரக்க ஒலிக்கிறது.
இதில் மனதை நெருடும் மற்றொரு விஷயம் என்ன தெரியுமா..?பஸ்ஸிலிருந்து தூக்கி எறியப்பட்ட மாணவி, காயங்களுடன் நிர்வாணமாக நடுரோட்டில் கிடந்துள்ளார். போலீசார் வரும்வரை ஒரு துணியை அவர் மீது போர்த்தக்கூட யாரும் முன்வரவில்லை என்பதுதான்.,!சம்பவத்தின் கோரம், இந்திய மங்கையை குறிப்பாக, பதின்பருவ பாவையரை கோபக்கார குமரியாக கொதித்தெழ வைத்தது.ஆம்..!அவர்களையே, 2012-இன் செய்தி நாயகியாக வசந்தம் முன்வைக்கின்றது..

Continue reading பலாத்காரப் பேயாட்டம்..! பரிதவிப்பில் பாரதம்.,!!

‘என்னய எப்டியாவது நாட்டுக்கு கூட்டிட்டு போங்கம்மா…!’

ன்பின் சகோதர-சகோதரிகளே..!பலாத்காரத்தால் பலியான இந்திய சகோதரியின் மறைவால் கோபக்கார இந்தியா கொதித்த சூடு அடங்குவதற்குள்,மரணதண்டனை விதிக்கப்பட்ட இலங்கை சகோதரி ரிஸானாவின் மறைவால் இலங்கையில் விவாத சர்ச்சைகள் சூடுபிடித்து நிற்கின்றன.

ரிஸானா விவகாரம் எந்த வகையில் அணுகப்பட வேண்டும் என்பது குறித்து பல்வேறு அம்சங்கள் முகநூலிலும் இன்னபிற ஊடகங்களிலும் விவரம் அறிந்தோர் மத்தியிலும் குறிப்பாக ரிஸானா சார்ந்த இலங்கை நாட்டிலும் பல கோணங்களில் அலசப்படுகின்றன.இந்த விவகாரத்தை எப்படி அணுகுவது..? யார் குற்றவாளி..?முதலில், இரு உயிர்கள் (ரிஸானா மற்றும் இறந்த ஸவூதி குழந்தை) பற்றிய இந்த பிரச்னையில் பல்வேறு அம்சங்கள் இருப்பினும் நான்கு அதிமுக்கிய கோணங்களில் இதைக் காணலாம்.ஒன்று: ரிஸானா குற்றவாளி,தண்டனை கிடைக்க வேண்டும்.இரண்டு:ரிஸானா நிரபராதி,சட்டம் Continue reading ‘என்னய எப்டியாவது நாட்டுக்கு கூட்டிட்டு போங்கம்மா…!’

வசந்தம், ஜனவரி 2013 மாத இதழ்

வசந்தம், ஜனவரி 2013 மாத இதழ்
வசந்தம், ஜனவரி 2013 மாத இதழ்

வசந்தம், ஜனவரி 2013 மாத இதழ் முழுமையாக இங்கே வாசிக்கலாம்..!

வசந்தம், ஜனவரி 2013 மாத இதழ் by